Monday, 23 March 2020

வாழ்க்கையும் பஞ்ச பூதங்களும்...

வாழ்க்கை என்பதற்கு குறிப்பிட்ட வடிவம் கிடையாது.
அது தன் வடிவத்தை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தேர்வு செய்து கொள்ளும்.
சிலர் அதற்கு குறிப்பிட்ட வடிவம் கொடுக்க முயல்கிறார்கள் 
ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை அதன் தன்மை பற்றி.
மனிதனின் வாழ்க்கையை பஞ்ச பூதங்களுக்கு ஒப்பிடலாம்.
வாழ்க்கை என்பது நீர் போல் சமயத்திற்கு தகுந்தாற்போல
வடிவம், தன்மை இவற்றை மாற்றி கொள்ளும் தன்மை கொண்டது.
இங்கு தன்மை என்பது குணமாக கொள்ளலாம்.
நம் எண்ணங்களுக்கோ எல்லை என்பது கிடையாது, இந்த பிரபஞ்சத்தை போல்.
நம் உடல் என்பது நிலமாக உருவகப்படுத்தி பார்க்கலாம்,
அதனை எத்தனையோ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பட்டை தீட்டுகிறார்கள்.
இங்கு சோதனைகள் என்பது
வெவ்வேறு உணவுகள், அழகு சாதனங்கள், உடற்பயிற்சி, விளையாட்டு, சண்டைகள், இன்னும் பல.
பார்வை என்பதை நாம் நெருப்போடு ஒப்பிடலாம்.
சமயத்திற்கு தகுந்தாற்போல் விளக்கொளியை போலவும், எரிமலையாகவும் மாறும்.
கனிவு,  காதல், காமம், கோபம், பொறாமை, அச்சம், ஆணவம், அகங்காரம்.
 காற்றை நுகர்தலுக்கும் செவியுணர்வுக்கும் ஒப்பிடலாம்.
காற்றில் வரும் அனைத்து ஒலியையும், வாசனைகளையும் உணர்கிறோம்.

No comments: