Monday, 23 March 2020

வாழ்க்கையும் பஞ்ச பூதங்களும்...

வாழ்க்கை என்பதற்கு குறிப்பிட்ட வடிவம் கிடையாது.
அது தன் வடிவத்தை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தேர்வு செய்து கொள்ளும்.
சிலர் அதற்கு குறிப்பிட்ட வடிவம் கொடுக்க முயல்கிறார்கள் 
ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை அதன் தன்மை பற்றி.
மனிதனின் வாழ்க்கையை பஞ்ச பூதங்களுக்கு ஒப்பிடலாம்.
வாழ்க்கை என்பது நீர் போல் சமயத்திற்கு தகுந்தாற்போல
வடிவம், தன்மை இவற்றை மாற்றி கொள்ளும் தன்மை கொண்டது.
இங்கு தன்மை என்பது குணமாக கொள்ளலாம்.
நம் எண்ணங்களுக்கோ எல்லை என்பது கிடையாது, இந்த பிரபஞ்சத்தை போல்.
நம் உடல் என்பது நிலமாக உருவகப்படுத்தி பார்க்கலாம்,
அதனை எத்தனையோ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பட்டை தீட்டுகிறார்கள்.
இங்கு சோதனைகள் என்பது
வெவ்வேறு உணவுகள், அழகு சாதனங்கள், உடற்பயிற்சி, விளையாட்டு, சண்டைகள், இன்னும் பல.
பார்வை என்பதை நாம் நெருப்போடு ஒப்பிடலாம்.
சமயத்திற்கு தகுந்தாற்போல் விளக்கொளியை போலவும், எரிமலையாகவும் மாறும்.
கனிவு,  காதல், காமம், கோபம், பொறாமை, அச்சம், ஆணவம், அகங்காரம்.
 காற்றை நுகர்தலுக்கும் செவியுணர்வுக்கும் ஒப்பிடலாம்.
காற்றில் வரும் அனைத்து ஒலியையும், வாசனைகளையும் உணர்கிறோம்.

Friday, 6 March 2020

சேமிப்பீர்.....

குடிநீரை வீணாக்காதீர், 
மழை நீர் சேமிப்போம் ...
அறிவுரை கூறுகிறது 
தண்ணீர் சிந்திக் கொண்டு செல்லும் லாரி...கண்ணீருடன்.

Wednesday, 20 September 2017

இல்லாவிட்டால் இருக்கும்...!!!

உண்மை இருந்தால் பயம் இருக்காது, இல்லாவிட்டால் இருக்கும்...!!!
If there is a truth then no place for fear, If it is not then there is...!!!

கடவுளுக்கு காவல்....!!!

உலகை காக்கும் கடவுளுக்கு காவல்

உலகை காக்கும் கடவுளுக்கு காவல் பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் சிலை அருகில் காவலர்கள்...!!!
கிருஷ்ண ஜெயந்தி அன்று கோயில்களில் காவலர்கள்...
ரம்ஜான் அன்று மசூதி அருகில் காவலர்கள்...
கிறிஸ்துமஸ் அன்று கோயில்களில் காவலர்கள்...
இப்படி இருக்க நான் எப்படி சொல்வேன் அமைதியான இந்தியா...???

Monday, 11 July 2016

இதுவும் வாழ்வின் ஒரு மாற்றமே...!!!

வாழ்க்கையில் ஒரு பாதியில் வெறுப்பவற்றை மறு பாதியில் விரும்பத்தொடங்குவோம்...
ஏற்கனவே விரும்பியவற்றை வெறுக்க மாட்டோம் மாறாக மறக்கவோ அல்லது சிறிதளவே விரும்புவோம்.
இதுவும் வாழ்வின் ஒரு மாற்றமே...!!!

உணர்ந்தேன்!!!

இரவு வந்ததை உணர்ந்தேன்
அவள் விழிகள் மூடும் பொழுது!!!

விடியல் வந்ததை உணர்ந்தேன்
அவள் விழிகள் திறக்கும் பொழுது!!!

Thursday, 24 March 2016

நானோ நாமோ தீர்மானிப்பதில்லை...!!!

நானோ நாமோ தீர்மானிப்பதில்லை...!!!

என் பிறப்பு, இறப்பை நான் தீர்மானிப்பதில்லை !!!
என் அன்னை, தந்தை, உடன் பிறப்புகள், மனையாள், குழந்தைகளை நான் தீர்மானிப்பதில்லை !!!
என் வெற்றிகள், தோல்விகளையும் நான் தீர்மானிப்பதில்லை !!!
நான் என்ன செய்ய வேண்டும், கூடாது என்பதையும் நான் தீர்மானிப்பதில்லை !!!
நான் எங்கு செல்ல வேண்டும், கூடாது என்பதையும் நான் தீர்மானிப்பதில்லை !!!
பின் எதற்காக நன் படைக்கப்பட்டேன்...?
நாம் அனைவரும் இந்த உலகில் பிறந்ததற்கு நமது கர்மாவே காரணம்...!!!
அவனவன் தன்னுடைய விதி
ப் பயனால் இந்த பூவுலகில் பிறந்து, இறக்கிறான்.
இல்லை என்றால் மீண்டும் இந்த பூவுலகில் பிறந்து தனது கர்மாவை செய்ய தொடங்குகிறான்...
இது ஒரு சுழற்சி, இந்த சுழற்சியில் இருந்து விடுபட அதாவது
மீண்டும் பிறக்காமல் இருக்க அந்த பரமாத்மாவை சரணடைவதே தீர்வு.