Monday, 11 July 2016

இதுவும் வாழ்வின் ஒரு மாற்றமே...!!!

வாழ்க்கையில் ஒரு பாதியில் வெறுப்பவற்றை மறு பாதியில் விரும்பத்தொடங்குவோம்...
ஏற்கனவே விரும்பியவற்றை வெறுக்க மாட்டோம் மாறாக மறக்கவோ அல்லது சிறிதளவே விரும்புவோம்.
இதுவும் வாழ்வின் ஒரு மாற்றமே...!!!

உணர்ந்தேன்!!!

இரவு வந்ததை உணர்ந்தேன்
அவள் விழிகள் மூடும் பொழுது!!!

விடியல் வந்ததை உணர்ந்தேன்
அவள் விழிகள் திறக்கும் பொழுது!!!

Thursday, 24 March 2016

நானோ நாமோ தீர்மானிப்பதில்லை...!!!

நானோ நாமோ தீர்மானிப்பதில்லை...!!!

என் பிறப்பு, இறப்பை நான் தீர்மானிப்பதில்லை !!!
என் அன்னை, தந்தை, உடன் பிறப்புகள், மனையாள், குழந்தைகளை நான் தீர்மானிப்பதில்லை !!!
என் வெற்றிகள், தோல்விகளையும் நான் தீர்மானிப்பதில்லை !!!
நான் என்ன செய்ய வேண்டும், கூடாது என்பதையும் நான் தீர்மானிப்பதில்லை !!!
நான் எங்கு செல்ல வேண்டும், கூடாது என்பதையும் நான் தீர்மானிப்பதில்லை !!!
பின் எதற்காக நன் படைக்கப்பட்டேன்...?
நாம் அனைவரும் இந்த உலகில் பிறந்ததற்கு நமது கர்மாவே காரணம்...!!!
அவனவன் தன்னுடைய விதி
ப் பயனால் இந்த பூவுலகில் பிறந்து, இறக்கிறான்.
இல்லை என்றால் மீண்டும் இந்த பூவுலகில் பிறந்து தனது கர்மாவை செய்ய தொடங்குகிறான்...
இது ஒரு சுழற்சி, இந்த சுழற்சியில் இருந்து விடுபட அதாவது
மீண்டும் பிறக்காமல் இருக்க அந்த பரமாத்மாவை சரணடைவதே தீர்வு.