Wednesday, 27 April 2011

வாழ்கை என்பது ஒரு தேடலா !!! ?

வாழ்கை என்பது ஒரு தேடலா !!! ?

தொலைக்காத பொருளை தேடுவதாலா?
தொலைந்த  பொருளை தேடுவதாலா?

கிடைத்த பொருளை தேடுவதாலா?
கிடைக்காத பொருளை தேடுவதாலா?

இருப்பதை தேடுவதாலா?
இல்லாததை இருப்பதாக தேடுவதாலா?

மறைத்ததை தேடுவதாலா?
மறைந்ததை தேடுவதாலா?

நிஜத்தை தேடுவதாலா?
கற்பனையை நிஜமென தேடுவதாலா?

தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக்கொண்டே போகிறேன்...
கண்டுவிட்டால் இது அல்ல அது,
அது அல்ல இது என்றது மனம்...!!!

இறுதி வரை (சாகும் வரை) தேடல்தானா வாழ்வில்...ஆம்!!!
                      - மரிய சேகர்.

விதியா? மதியா?

விதியை, மதியால் வெல்லலாம் என்றால்,
மதி செய்யும் வேலையை விதியே தீர்மானித்தால்?
என்ன செய்வேன் மதியை வைத்து!!!